👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முன், மத்திய உயர்கல்வி நிறுவன பேராசிரியர்கள் வழியாக ஆய்வு நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகள், மாணவர் சேர்க்கைக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரத்துடன், அண்ணா பல்கலையின் இணைப்பை பெற வேண்டும். இந்த இணைப்பை வழங்கும் முன், அண்ணா பல்கலையின் பேராசிரியர் குழுவினர், கல்லுாரிகளுக்கு சென்று, ஆய்வு நடத்துவர்.
உள்கட்டமைப்புஅப்போது, கல்லுாரியின் நுாலகம், வகுப்பறை வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி, வளாக அமைப்புகள், பாதுகாப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வகங்களின் விபரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்வர்.இந்த ஆண்டுக்கான ஆய்வு பணியில், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை ஈடுபடுத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், இந்த குழுவில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
கட்டாயம்:
அதேபோல், ஏ.ஐ.சி.டி.இ., சார்பிலும், கல்லுாரிகளில் திடீர் சோதனை நடத்தவும், கட்டமைப்பு வசதிகள் குறித்த, உண்மைத் தன்மையை நேரில் அறிந்து கொள்ளவும், குழு அனுப்பப்படும் என, கூறப்பட்டுள்ளது. இதனால், அங்கீகாரம் பெற விரும்பும் கல்லுாரிகள், உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.