Breaking

Sunday, February 16, 2020

NCERT: 6-12th புத்தகங்களை மொழி பெயர்க்க உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆறு முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில், என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிடும் பாடப் புத்தகங்களை, தமிழில் மொழிபெயர்க்கும்படி, தஞ்சை தமிழ் பல்கலைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆவடி, பூம்பொழில் நகரைச் சேர்ந்த, ஆர்.சந்தர் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தஞ்சை தமிழ் பல்கலையின் பொது தகவல் அதிகாரிக்கு அனுப்பிய மனு:என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உள்ளன.போட்டி தேர்வுகள், என்.சி.இ.ஆர்.டி., வெளியிடும், ஆறு முதல், பிளஸ் ௨ வரையிலான பாடப் புத்தகங்கள் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இதனால், தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, மிகவும் கஷ்டமாக உள்ளது.ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உள்ள பாடப் புத்தகங்களை, தமிழில் மொழிபெயர்க்க, தமிழ் பல்கலை நடவடிக்கை எடுத்தால், தமிழ் வழி பயின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தமிழில் மொழிபெயர்த்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேல் முறையீடுஇதற்கு பதில் வராததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு, தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன் விசாரணைக்கு வந்தது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து, மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு:தஞ்சை தமிழ் பல்கலையின், மொழிபெயர்ப்பு துறையின் முக்கிய நோக்கம், தமிழ் இலக்கியங்களை இதர மொழிகளில் மொழிபெயர்ப்பதும், மற்ற மொழிகளில் உள்ளதை, தமிழில் மொழிபெயர்ப்பதும் ஆகும். எனவே, தகவல் பெறும் உரிமை சட்டப்படி, தமிழ் பல்கலையின் மொழிபெயர்ப்பு துறைக்கு, பொறுப்பு உள்ளது.தமிழ் வழியில் படித்தவர்கள், உயர் கல்விக்கும் மற்றும் போட்டி தேர்வுகளுக்கும் தயாராகும்போது, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை படிப்பதற்கு கஷ்டப்படுகின்றனர்.
நடவடிக்கை ஏனென்றால், இந்தப் புத்தகங்கள், தமிழில் இல்லை. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உள்ள, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை, தமிழில் மொழிபெயர்த்தால் பயனுள்ளதாக அமையும்.எனவே, ஆறு முதல், பிளஸ் ௨ வரையிலான, என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்களை, தமிழில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ் பல்கலை பதிவாளர் மற்றும் மொழிபெயர்ப்பு துறை தலைவருக்கு உத்தரவிடப்படுகிறது. தமிழில் மொழிபெயர்த்த பின், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, முத்துராஜ் உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog