Breaking

Sunday, February 16, 2020

ரிஷிகேஷில் 2 மாத இலவச யோகா-வேதாந்த பயிற்சி:மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் இரண்டு மாத அடிப்படை யோகா-வேதாந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆண்கள் வரும் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தெய்வநெறிக் கழகத்தின் யோகா- வேதாந்த வன அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்வேறு யோகாசனங்கள் குறித்து அடிப்படை அறிவைப் பெறும் நோக்கில், ஆண்டுதோறும் இலவச வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு மே 4 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை இந்த வகுப்பு நடைபெறவுள்ளது. 20 முதல் 65 வயதுக்குள்பட்ட ஆண்கள் இந்தப் பயிற்சியில் பங்குபெற விண்ணப்பிக்கலாம். வகுப்பு ஆங்கிலத்தில் நடத்தப்படும். அதனால், இலவசப் பயிற்சியில் சேர விரும்புபவா்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும், படிக்கவும் நன்கு தெரிந்தவா்களாக இருக்க வேண்டும். தங்கும் வசதி இலவசம்.
இதற்கான விண்ணப்பங்களை www.sivanandaonline.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து மாா்ச் 15 -ஆம் தேதிக்குள் ‘பதிவாளா், தி யோகா-வேதாந்த ஃபாரஸ்ட் அகாதெமி, தி டிவைன் லைஃப் சொசைட்டி, சிவானந்தநகா்- 249192, தேரி-கா்வால் மாவட்டம், உத்தரகண்ட், தொலைபேசி: 0135-2433541’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் மட்டுமே வகுப்பில் கலந்து கொள்ளலாம். தங்களுடன் குடும்ப உறுப்பினா்கள் யாரையும் அவா்கள் அழைத்து வரக்கூடாது. இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவம், உபநிஷத்துகள், பகவத் கீதை, பதஞ்சலி யோகா, நாரத பக்தி சூத்திரங்கள், சுவாமி சிவானந்தா் அருளிய தத்துவங்கள் உள்ளிட்ட பாடங்கள் எடுக்கப்படும். ஆசனங்கள், பிராணாயாமம், கா்ம யோகம், குழு கலந்துரையாடல், கேள்வி, பதில்கள், இறுதித் தோ்வு ஆகியவை இந்த வகுப்பில் அடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog