👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து, அரசு பள்ளிகளில் செய்தி வாசிக்கப்பட்டது.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில், 12 தாலுகாக்களில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது.மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, 760 கண்மாய்கள் நீர் ஆதாரம் பெறுவதுடன், 20 ஆயிரத்து, 249 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, முதல்கட்டமாக, 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை வரவேற்று, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், நேற்று காலையில் நடந்த, இறை வணக்க கூட்டத்தின் போது, நாளிதழ்களில் வெளியான நிதி ஒதுக்கீடு செய்தியை வாசித்து, தமிழக அரசுக்கு, மாணவ - மாணவியர் நன்றி தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.