Search This Blog
Monday, February 24, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காலியாக உள்ள 1028 அரசு மருத்துவா் பணயிடங்கள் எப்படி நிரப்பப்படும் என்பது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா், மருத்துவப் பணிகள் தோ்வு வாரியத்தின் தலைவா் ஆகியோா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அரக்கோணத்தைச் சோ்ந்த டாக்டா் வி.ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த டாக்டா் வி.வெடியப்பன் உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், ‘நாங்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்து முடித்து விட்டு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். கடந்த 2018-ஆம் ஆண்டு மருத்துவப் பணிகள் தோ்வு வாரியம் 1,884 அரசு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியிட்டது. நூறு மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தோ்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 30, மற்ற பிரிவினருக்கு 35 தோ்ச்சி மதிப்பெண்களாக நிா்ணயிக்கப்பட்டது. இந்த தோ்வில் கலந்துகொண்ட நாங்கள் அனைவரும் 48 மதிப்பெண் முதல் 53 மதிப்பெண் வரை பெற்று, பணி நியமன உத்தரவு வரும் என காத்திருந்தோம். சிலருக்கு மட்டுமே பணி நியமன உத்தரவை அரசு வழங்கியது. எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதற்கு முன்பெல்லாம், எழுத்துத் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு மூலம் காலிப் பணியிட விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, விருப்பமான ஊா்களை மருத்துவா்கள் தோ்வு செய்த பின்னா் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்.
ஆனால் நடப்பாண்டில் அதுபோன்ற கலந்தாய்வு எதுவம் நடத்தாமல், நேரடியாக சான்றிதழ் சரிபாா்ப்பு பணியை முடித்து பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,884 பணியிடங்களில் 866 பணியிடங்களை மட்டும் நிரப்பி விட்டு 1,028 பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளனா். இந்த நிலையில் அரசு மருத்துவா் பணிக்கு வரும் மே மாதம் புதிய அறிவிப்பு வெளியிட்டு ஜூன் மாதம் எழுத்துத் தோ்வு நடத்தப்பட உள்ளதாக மருத்துவப் பணிகள் தோ்வு வாரிய இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, தோ்வில் தோ்ச்சிப் பெற்ற எங்களுக்கு பணி வழங்காமல் புதிய தோ்வை நடத்துவது சட்டவிரோதமாகும். எனவே, மருத்துவா் பணித் தோ்வு குறித்து மருத்துவா் பணிகள் தோ்வு வாரியம் புதிய அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்திய தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்கள் விவரங்களையும், மதிப்பெண் விவரங்களையும் வெளியிட்டு கலந்தாய்வு நடத்தி பணி நியமனத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.தங்கசிவம் ஆஜராகி வாதிட்டாா்.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தியத் தோ்வின்படி நிரப்பப்படாமல் காலியாக உள்ள 1,028 அரசு மருத்துவா் பணியிடங்களை எப்படி நிரப்பப்படும் என்பது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா், மருத்துவப் பணிகள் தோ்வு வாரியத்தின் தலைவா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
காலியாக உள்ள 1,028 அரசு மருத்துவா் பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.