👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பாலியல் தொல்லை புகாரில், மதுரை பல்கலை பேராசிரியருக்கு, கட்டாய ஓய்வு அளித்ததை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. மீண்டும் பணியில் அமர்த்த, உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை திரைப்பட மற்றும் மின்னணு ஊடகவியல் மைய பேராசிரியர், கர்ண மகாராஜன். பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியருக்கு எதிராக, ஆராய்ச்சி மாணவி புகார் அளித்தார். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு, புகாரை விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, பேராசிரியர் கர்ண மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளித்து, பல்கலை பதிவாளர், ௨௦௧௯ ஆகஸ்ட்டில் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக் கோரி, கர்ண மகாராஜன் தாக்கல் செய்த மனுவில், 'உள்நோக்கத்துடன் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க, மேல்முறையீடு செய்ய, சந்தர்ப்பம் அளிக்கவில்லை' என, கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி வி.எம்.வேலுமணி விசாரித்தார். இருதரப்பு வாதங்களுக்கு பின், பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு அளித்ததை, ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் பணியில் அமர்த்தவும், நீதிபதி உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.