10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 24, 2020

Comments:0

10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்: பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
10, 12-ம் வகுப்புகளுக்கு மாதிரி வினாத்தாள்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் விற்பனை செய்ய உள்ளது. 10, 12-ம் வகுப்புகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பு, ஜனவரி 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தற்போது கட்டுமானப் பணி நடந்து வருவதால், அங்கே இந்த ஆண்டு மாதிரி வினாத்தாள் விற்பனை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை எம்எம்டிஏ அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 27 முதல் மாதிரி வினாத்தாள் விற்பனையாகிறது. அதேபோல சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியிலும், சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் மாதிரி வினாத்தாள்கள் விற்பனையாக உள்ளன.
மாதிரி வினாத்தாளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழித் தேர்வுக்கு ஒரே தொகுதியாக 60 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக ரூ.80-க்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு விற்கப்பட உள்ளது.
10, 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் மற்றும் தீர்வு புத்தகங்களை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் 32 இடங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு பொதுத்தேர்வுக்கு தயாராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இதில் குறிப்பாக 12ம் வகுப்பு கணித பாடத்துக்கான தீர்வு புத்தகமும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாதிரி வினாத்தாள் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணக்கு பாடத்துக்கு தீர்வுப் புத்தகம் தமிழ், ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை சுமார் 32 ஊர்களில் விற்பனை செய்ய மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை போலவே 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் தலா 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews