Breaking

Thursday, January 23, 2020

ஹைடெக் லேப் அமைக்க 186 அரசு பள்ளிள் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரையில் ஹைடெக் லேப் (உயர் தொழில் நுட்பம் ஆய்வகம்) அமைக்க 186 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளி அளவில் மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் மற்றும் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தமிழகத்தில் 3090 அரசு உயர் நிலை, 2939 மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப்கள் அமைக்க 462 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் 186 அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 6.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் லேப்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
பள்ளிகளில் இதற்கென தனி வகுப்பறை ஒதுக்கப்பட்டு உயர் நிலை பள்ளியில் தலா 10 கணினிகள், மேல்நிலையில் தலா 20 கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களும் இணையவழி கல்வி கிடைப்பது மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கமும் கிடைக்கும். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், &'&'ஹைடெக் லேப்கள் அமைக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. லேப்களை கையாள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் பல்வேறு புதிய கண்டு பிடிப்புகளுக்கு வித்திடும்," என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog