👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக அரசு துறைகளில், தொழிற்துறை கூட்டுறவு அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, சார் - பதிவாளர் உட்பட, 23 வகை பதவிகளில், 1,338 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2018 நவம்பர், 11ல், முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 6.29 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், தேர்ச்சி பெற்ற, 14 ஆயிரத்து, 797 பேருக்கு, முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவம்பர், 6 முதல், 30 வரை நேர்காணல் நடந்தது. இதன் முடிவுகள், நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிடப்பட்டன. இதில், மாநிலத்தில் முதல் மாணவியாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த சுபாஷினி, 22, என்ற பட்டதாரி பெண் வெற்றி பெற்றுள்ளார். மொத்தம், 340க்கு, 210.5 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியில், எம்.ஏ., பொருளாதாரம் படித்து வருகிறார்.சுபாஷினி கூறியதாவது:கல்லுாரி படிப்பில் சேர்ந்தது முதல், போட்டி தேர்வுக்கு தயாரானேன். வார விடுமுறை நாட்களில், தனியார் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெற்றேன். நகராட்சி கமிஷனர் பணியிடத்தை தேர்வு செய்ய உள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.சுபாஷினியின் தந்தை வடிவேல், அவிநாசி அருகேயுள்ள திம்மணையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர். தாய், தனபாக்கியம், ஈரோடு மாவட்டம் தாளவாடியில், வட்டார கல்வி அலுவலராக பணிபுரிகிறார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.