👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
IMPORTANT DATE FOR NEET
APPLY HERE
நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என என்.டி.ஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எய்ம்ஸ், ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள், ஏ.எஃப்.எம்.சி, இ.எஸ்.ஐ.சி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி என்பது அவசியம். வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர விரும்பும் அனைவருக்கும் நீட் 2020 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் மருத்துவம் படிக்க தேவையான சான்றிதழ் பெற வேண்டும். 12 ஆம் வகுப்பு முடித்த இந்தியர்கள் அனைவரும் நீட் 2020 தேர்வு எழுத தகுதியுடையவர்கள்.
2020ஆம் ஆண்டு டிசம்பவர் 31 க்கு முன்னதாக அவர்களின் வயது 17 ல் இருந்து 25 க்குள் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல்/ பயோ டெக்னாலஜி ஆகிய பாடங்களை கணிதத்துடன் அல்லது ஆங்கிலத்துடன் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்தை பயின்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பங்கள் அல்லது நீட் 2020க்கான பதிவு இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் தொடங்கும். இதுகுறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளமான ntaneet.nic.in -ல் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி, முக்கியமான தேதிகள், வயது வரம்பு விதிகள் மற்றும் பிற மாற்றங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.
நீட் நுழைவுத்தேர்வுக்கு www.nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையதளங்களில் டிசம்பர் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்த ஜனவரி 1 வரை தேசிய தேர்வு முகமை அவகாசம் அளித்துள்ளது. எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அடுத்தாண்டு மே 3ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவினருக்கு ரூ.1,500, ஒபிசி, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரூ. 1,400 விண்ணப்பக்கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி, திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்துடன் ஜி.எஸ்.டி சேவை கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதிக்குள் வெளியிட தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது. டிச.,31 ம் தேதி வரை ஆன்லைனிலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது.
இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.