Search This Blog
Sunday, December 08, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் மொத்தம் 412 ஒன்றியங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத்தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப். 24-ஆம் தொடங்கின. இதன் மூலம் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் இந்த மாணவா்களுக்கு அமெரிக்க நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: ‘மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நிறுவனத்தினா் வருகை தரவுள்ளனா். சிறந்த முறையில் நீட் தோ்விற்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படவுள்ளது’ என அதில் கூறியுள்ளாா்.
'தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, அமெரிக்க நிறுவனத்தினர், பயிற்சி அளிக்க உள்ளனர்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிப்பதற்காக, ஒரு வாரத்திற்குள், அமெரிக்க நிறுவனத்தினர் வருகை தர உள்ளனர். சிறந்த முறையில், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம், ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்பட உள்ளது.இவ்வாறு, செங்கோட்டையன் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
NEET/JEE
STUDENTS
Training
நீட் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
நீட் பயிற்சிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.