கடல்சார் பல்கலையின் நுழைவுத்தேர்வு அல்லது ஜே.இ.இ. தேர்வு என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றால் தான் கடல்சார் படிப்பில் மாணவர் சேர்க்கை வழங்குவது குறித்து இந்திய கடல்சார் பல்கலை விதிகளை மாற்ற உள்ளது.இதற்கானகல்வி கவுன்சில் அறிவிப்பு மார்ச்சில் வெளிவரும் என பல்கலையின் துணைவேந்தர்சிவக்கொழுந்துதெரிவித்தார்.நுழைவுத்தேர்வில் மாற்றம்இந்திய கடல் சார் பல்கலை சென்னையில் உள்ளது. இதன் கீழ் சென்னை, கொச்சி, கோல்கட்டா, மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கடல்சார் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
மேலும் பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று நுாற்றுக்கணக்கான தனியார் கடல்சார் கல்லுாரிகளும் நாடு முழுவதும் இயங்குகின்றன. அவற்றில் கடலியல் இன்ஜினியரிங், கடலியல் மேலாண்மை, கடல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த படிப்புகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள கடல்சார் பல்கலை சார்பில் தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.இந்நிலையில் வரும் கல்வி ஆண்டில் கடல்சார் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தேவையான முயற்சிகளை கடல்சார் பல்கலை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
துணைவேந்தர் பேட்டி
இதுகுறித்துதுணை வேந்தர் நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:மாணவர்களை சேர்க்க ஏற்கனவே பொது நுழைவு தேர்வை நடத்தி வருகிறோம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.வரும் கல்வி ஆண்டில் கடல்சார் படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும் மாணவர் சேர்க்கை முறையை இன்னும் எளிமைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.கடல்சார் படிப்புகளில் சேர மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்சேர்க்கை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.ஐ.ஐ.டி. நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் ஜே.இ.இ. என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களையும் கடல்சார் படிப்புகளில் சேர்க்க அனுமதி அளிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.
இரண்டு 'சாய்ஸ்'
ஜே.இ.இ. தேர்வு மற்றும் கடல்சார் பல்கலையின் பொது நுழைவுத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றாலே கடலியல் படிப்புகளில் சேரலாம் என மாணவர்களுக்கு இரண்டு 'சாய்ஸ்' அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப் படுகிறது. டிப்ளமா கடலியல் படிப்புக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்களை சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த முடிவால் கடல்சார் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதுகுறித்து கல்வியாளர்கள் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்கலையின் கல்வி கவுன்சில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு துவங்கி உள்ளது.
மார்ச்சில் அறிவிப்பு
மேலும் பல்கலையின் கல்வி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து கல்வி கவுன்சிலின் உறுப்பினர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகிகளின் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் அடங்கிய அறிவிப்பு மார்ச்சில் வெளியிடப்படும்.
அதில் ஜே.இ.இ. தேர்வுப்படி மாணவர் சேர்க்கையா அல்லது கடல் சார் பல்கலையின் நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையா அல்லது இரண்டு தேர்வுகளில் ஏதாவது ஒரு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அவர்களுக்கு சேர்க்கை வழங்குவதா என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கடல் சார் பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி துர்கா பிரசாத் உடனிருந்தார்.
கடலியல் படிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக களப்பயிற்சி அளிக்க பயிற்சி கப்பல் வாங்க உள்ளோம்.தற்போது அதிகமான மாணவர்களுக்கு 'கேம்பஸ்' நேர்காணலில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேராசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கவும் கடல்சார் படிப்பில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு ஷிப்பிங் நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்புக்கேற்ப பாட திட்டம் தயாரித்து இணைக்கப்பட்டுள்ளது.இந்த படிப்புக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது
கடல்சார் பல்கலையின் நுழைவுதேர்வு அல்லது ஜே.இ.இ., தேர்வு என, ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றால் தான், கடல்சார் படிப்பில் மாணவர் சேர்க்கை வழங்குவது குறித்து, இந்திய கடல்சார் பல்கலை விதிகளை மாற்ற உள்ளது.
இது குறித்து, கல்வி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து, மார்ச்சில் அறிவிப்பு வெளியிடப்படும் என, பல்கலையின் துணைவேந்தர் தெரிவித்தார். இந்திய கடல்சார் பல்கலை, சென்னை அருகே செம்மஞ்சேரியில் செயல்படுகிறது. இந்த பல்கலையின் கீழ், சென்னை, கொச்சி, கோல்கட்டா, மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில், கடல்சார் கல்லுாரிகள் செயல்படுகின்றன. மேலும், பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று, நுாற்றுக்கணக்கான தனியார் கடல் சார் கல்லுாரிகளும், நாடு முழுவதும் இயங்குகின்றன. அவற்றில், கடலியல் இன்ஜினியரிங், கடலியல் மேலாண்மை, கடல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் நடத்தப் படுகின்றன. தரவரிசைஇந்த படிப்புகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, கடல்சார் பல்கலை சார்பில், தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் ஆண்டு தோறும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், கடல் சார் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க தேவையான முயற்சிகளை, கடல்சார் பல்கலை மேற்கொண்டுள்ளது.இதற்காக, மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.இது குறித்து, கடல்சார் பல்கலையின் துணைவேந்தர் கே.எம்.சிவக்கொழுந்து, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:கடல்சார் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ஏற்கனவே, பொது நுழைவு தேர்வை நடத்தி வருகிறோம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, தரவரிசை அடிப்படையில், மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், கடல்சார் படிப்பில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர் சேர்க்கை முறையை இன்னும் எளிமைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
எனவே, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கு இணையாக, கடல்சார் படிப்புகளிலும் சேர, மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.ஐ.ஐ.டி., நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய அளவில், ஜே.இ.இ., என்ற, நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கின்றனர். எனவே, இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களையும், கடல்சார் படிப்புகளில் சேர்க்க அனுமதி அளிக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம்.
இரண்டு, 'சாய்ஸ்'ஜே.இ.இ., தேர்வு மற்றும் கடல் சார் பல்கலையின் பொது நுழைவுத்தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றாலே, கடலியல் படிப்புகளில் சேரலாம் என, மாணவர்களுக்கு இரண்டு, 'சாய்ஸ்' அளிப்பது குறித்தும், ஆலோசனை நடத்தப்படுகிறது. டிப்ளமா கடலியல் படிப்புக்கு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும், மாணவர்களை சேர்ப்பது குறித்தும், பரிசீலிக்கப்படுகிறது. இந்த முடிவால், கடல்சார் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, தற்போதைய எண்ணிக்கையை விட, வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
இது குறித்து, கல்வியாளர்கள், இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்கலையின் கல்வி கவுன்சில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்பு துவங்கி உள்ளது. மார்ச்சில் அறிவிப்புமேலும், பல்கலையின் கல்வி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து, கல்வி கவுன்சிலின் உறுப்பினர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகிகளின் கருத்துகளின் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும். இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் அடங்கிய அறிவிப்பு, மார்ச்சில் வெளியிடப்படும். அதில், ஜே.இ.இ., தேர்வுப்படி மாணவர் சேர்க்கையா அல்லது கடல்சார் பல்கலையின் நுழைவு தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையா அல்லது இரண்டு தேர்வுகளில் ஏதாவது ஒரு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, அவர்களுக்கு சேர்க்கை வழங்குவதா என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, கடல்சார் பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி துர்கா பிரசாத் உடனிருந்தார்
.'கள பயிற்சிக்கு தனி கப்பல்'
கடல்சார் பல்கலை துணைவேந்தர் கே.எம்.சிவக்கொழுந்து, மேலும் கூறியதாவது:கடலியல் படிக்கும் மாணவர்களுக்கு, நேரடியாக களப்பயிற்சி அளிக்க, பயிற்சி கப்பல் ஒன்று வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல்சார் படிப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கு, முன்னாள் மாணவர்களும் பங்களிப்பு செய்கின்றனர். தற்போதைய நிலையில், 60 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' நேர்காணல் வழியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேராசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கவும், கடல்சார் படிப்பில், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடல்சார் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க, பல்வேறு ஷிப்பிங் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுடன் இணைந்து, வேலைவாய்ப்புக்கேற்ப பாடத் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. தற்போதைய வேலைவாய்ப்புகளின் அடிப்படையில், பாடத் திட்டத்தில் புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, கடல்சார் படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. வரும் ஆண்டுகளில், கடல்சார் படிப்பில், இன்னும் அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.