'5, 8க்கு பொது தேர்வு உண்டு; ஆனால், 'பெயில்' கிடையாது!' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 28, 2019

3 Comments

'5, 8க்கு பொது தேர்வு உண்டு; ஆனால், 'பெயில்' கிடையாது!'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சரும், செயலரும் புதிய விளக்கம் அளித்துள்ளனர். பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும், அதனடிப்படையில், மாணவர்களின் தேர்ச்சி இருக்காது என்றும், உறுதி அளித்தனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுவான ஒரு தேர்வை நடத்தலாம். இது குறித்து, அந்தந்த மாநிலங்கள் இறுதி முடிவு எடுத்து கொள்ளலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., வாரியமும், வேறு மாநிலங்களும், இன்னும் அமலுக்கு கொண்டு வரவில்லை. ஆனால், தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்தார்.ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வில் இருந்து விலக்கு பெறப்பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். அதேநேரம், தேர்வுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு, தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, பள்ளிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் காரணமாக, தேர்வு உண்டா, இல்லையா என்ற, குழப்பம் நிலவியது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், குழப்பத்தை தீர்க்கும் வகையில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர், நேற்று நிருபர்களிடம் விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு, எந்த மாணவரின் தேர்ச்சியும் நிறுத்தி வைக்கப்படாது. அதாவது, தேர்வு எழுதும் அனைவரும், அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். பொதுத் தேர்வை பொறுத்தவரை, ஐந்தாம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய, மூன்று பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு, பொதுத் தேர்வு கிடையாது; சாதாரண தேர்வு நடத்தப்படும். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கும், பொது தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையங்கள், மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஏற்படுத்தப்படும். வேறு பள்ளிக்கு செல்ல தேவையில்லை. ஐந்து மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் படிப்போர் மட்டும், வேறு பள்ளிகளுக்கு தேர்வு எழுத செல்ல வேண்டியிருக்கும்.இந்த தேர்வை பார்த்து, பெற்றோரும், மாணவர்களும் பீதியடைய வேண்டாம். வினாத்தாள் எளிதாக இருக்கும். அந்தந்த பள்ளிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் உத்தரவுப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகட்டாயம் நடத்தப்படும்.ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு எந்த மாணவரின் தேர்ச்சியும்நிறுத்தி வைக்கப்படாது.
அதாவது தேர்வு எழுதும் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். பொதுத் தேர்வை பொருத்தவரை ஐந்தாம் வகுப்புக்கு தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது; சாதாரண தேர்வு நடத்தப்படும்.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொது தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஏற்படுத்தப்படும்.
வேறு பள்ளிக்கு செல்ல தேவையில்லை. ஐந்து மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் படிப்போர் மட்டும் வேறு பள்ளிகளுக்கு தேர்வு எழுத செல்லவேண்டியிருக்கும்.இந்த தேர்வை பார்த்து பெற்றோரும் மாணவர்களும் பீதியடையவேண்டாம். வினாத்தாள் எளிதாக இருக்கும். அந்தந்த பள்ளிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

3 comments:

  1. Eppadi yippo 10 the 11th 12th mathiri nu sollunga

    ReplyDelete
  2. Eppadi yippo 10 the 11th 12th mathiri nu sollunga

    ReplyDelete
  3. 10th 11th 12th mathiri nu sollunga

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews