👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவியர், தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின், ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் தமிழக அரசின், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின்படி, அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவியருக்கு, தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப் படுகிறது. இதன்படி, தமிழகத்தில் உள்ள, 7,043 பள்ளிகளில் தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அரியலுார் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில், கராத்தே பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இந்தப் பள்ளிகளில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில் பயிலும், 650 மாணவியர், இப்பயிற்சியை பெறுகின்றனர். பயிற்சியுடன், பேரீச்சம் பழம், பிஸ்கட், கடலை மிட்டாய் உட்பட ஊட்டச்சத்து பொருட்களும் மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.
கராத்தே பயிற்சியாளர் ராஜசேகர் கூறியதாவது: வேலுார், ஜப்பான் சிட்டோரியோ கராத்தே பள்ளியில், மாஸ்டர் ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெற்ற நான், 15 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறேன். மாணவியருக்கு தற்காப்பு கலை மிக அவசியம். தங்களை முழுமையாக தற்காத்து கொள்ளும் அளவிற்கு, மாணவியரும் ஆர்வமுடன் கற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.