அண்ணா பல்கலை: கல்வியாளர்கள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

2 Comments

அண்ணா பல்கலை: கல்வியாளர்கள் கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசியாவிலேயே முதல் நிறுவனமான, அண்ணா பல்கலைக்கு, மத்திய அரசே முழு நிதியை அளித்து, உயர் புகழ் அந்தஸ்து வழங்க, கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மத்திய அரசின், இந்த ஆண்டுக்கான, உயர் புகழ் கல்வி நிறுவனத்துக்கான பட்டியலில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலையும், ஐ.ஐ.டி.,யும் தேர்வாகியுள்ளன. இதில், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்கு தேவையான நிதியை, மத்திய அரசு ஏற்றுள்ளது.ஆனால், அண்ணா பல்கலைக்கு, ஐந்து ஆண்டுகளுக்கான செலவீட்டு நிதி, 2,750 கோடி ரூபாயில், 1,000 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கும்; மீதமுள்ள நிதிக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.இதன் காரணமாக, அண்ணா பல்கலைக்கான அந்தஸ்து அறிவிப்பு, நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவெடுக்குமாறு, இப்பல்கலையின், முன்னாள் துணை வேந்தர்கள் பாலகுருசாமி, அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட கல்வியாளர்கள், கடிதம் எழுதியுள்ளனர்.அவர்களை தொடர்ந்து, அண்ணா பல்கலையின், முன்னாள் துணைவேந்தர் கருணாகரனும், நேற்று மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், 'இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.,க்களுக்கும், தொழில்நுட்ப பல்கலைகளுக்கும், தாயாக விளங்கும், அண்ணா பல்கலைக்கு, மத்திய அரசே அனைத்து நிதியையும் வழங்கி, உயர் புகழ் கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை, தாமதமின்றி வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. Thành phần skginseng học viện chuyên nghành quân y.

    ReplyDelete
  2. Sửa điều hoà hoạt động nhưng nhiệt độ
    không chính xác.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews