கட்டாய பாடத்தில் இருந்து கீதை நீக்கம் அண்ணா பல்கலைக்கு அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2019

Comments:0

கட்டாய பாடத்தில் இருந்து கீதை நீக்கம் அண்ணா பல்கலைக்கு அரசு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் படிப்பில் பகவத்கீதை பாடத்தை கட்டாய பாட பட்டியலில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் புதிய பாட திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.இதில் விருப்ப பாட பட்டியலில் இருந்த தத்துவவியல் இந்திய அரசியலமைப்பு ஒழுக்க நெறி ஆராய்ச்சி கட்டுரைக்கான ஆங்கிலம் உள்ளிட்ட பல பாடங்ககள் பி.இ. - பி.டெக். மாணவர்களுக்கு கட்டாய பாடமாக மாற்றப்பட்டன.அதில் தத்துவவியலில் இந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை மற்றும் நான்கு வேதங்கள் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும்; அதற்கு மூன்று கிரெடிட் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என அண்ணா பல்கலை நேற்று முன்தினம் அறிவித்தது.இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இன்ஜினியரிங் தொழில்நுட்பம் படிக்கும் மாணவனுக்கு தத்துவவியலும் கீதையும் எதற்கு என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த பிரச்னை தொடர்பாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா கல்வி குழு இயக்குனர் சஞ்சீப் குமார் பட்நாயக் ஆகியோரிடம் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதன்மை செயலர் மங்கத்ராம் சர்மா ஆகியோர் நேற்று விபரங்கள் கேட்டனர்.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ. அளித்த 32 பாடங்களின் பட்டியலில் உள்ள தத்துவவியலை தேர்வு செய்ததாக அண்ணா பல்கலையினர் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த பாடத்தை கட்டாய பாட பிரிவில் இருந்து நீக்கி விட்டு இன்ஜினியரிங்குக்கு தொடர்புடைய பாடத்தை வைக்கும்படி தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.விரைவில் பாடத்திட்ட பட்டியலை மாற்றி அண்ணா பல்கலை அறிவிக்கும் என உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews