👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''அரசு பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு முதல், காலணிக்கு பதில், இலவச ஷூ வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசின் ஒவ்வொரு துறையும், இந்தியாவுக்கு முன்மாதிரி துறையாக செயல்படுகின்றன. விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் வாயிலாக, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றுக்கான பாடம் நடத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும், ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி பயிற்றுவிக்கும் திட்டம், அடுத்த மாதத்திற்குள் துவங்கும்.பின்லாந்து நாட்டில் உள்ள தமிழர்கள் படிப்பதற்காக, தமிழில் தொன்மை வாய்ந்த, 500 புத்தகங்கள் அனுப்பப்பட உள்ளன. ஓய்வுபெறும் ஆசிரியர்கள், அதே பள்ளியில், சேவை அடிப்படையில் பணியாற்ற விரும்பினால், அனுமதி அளிக்கப்படும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பொது தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், மாணவர்களுக்கு இலவச காலணிக்கு பதிலாக, ஷூ வழங்கப்படும். இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.