ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை; அடுத்த மாதம் முதல் செயல்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை; அடுத்த மாதம் முதல் செயல்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் பொது கட்டடத்தின் 50வது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை அமெரிக்க தூதரகத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.விழாவில், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ. ஜஸ்டர் பங்கேற்று பேசுகையில், 'இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான உறவு மிகவும் வலுவாக உள்ளது. ஒரு லட்சத்து 96 ஆயிரம் இந்திய மாணவர்கள் தற்போது அமெரிக்காவில் உயர்கல்வி பயில்கின்றனர். இதுதவிர, லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றி, அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்' என்றார்.விழாவில், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், வரலாற்று ஆர்வலர் என பன்முகம் கொண்ட மறைந்த எஸ்.முத்தையா நினைவாக, அவரது புத்தகங்கள் மற்றும் புகைப்படம் அமெரிக்க நூலகத்தில் வைக்கப்பட்டது.அவற்றை திறந்துவைத்து பேசிய தமிழக அமைச்சர் பாண்டியராஜன், 'ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இடம்பெறச்செய்வதற்கான பணியை தமிழக அரசு திறம்பட செய்து வருகிறது. உலகளவில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து 40 கோடி ரூபாய் பெறப்பட்டு அதனுடன், தமிழக அரசும் தனது பங்களிப்பை அளித்தது. அதன் பயனாக, அடுத்த மாதத்தில் தமிழ் இருக்கை உருவாக்கப்படும். அதன்மூலம், தமிழ் ஆராய்ச்சிகள் மென்மேலும் வலுவடையும் என்று குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில், முத்தையாவின் குடும்பத்தினர், வரலாற்று நிபுணர் வி.ஶ்ரீ ராம், சென்னை அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜஸ், தூதரக அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews