👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இந்த தேர்வை எழுத, 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, செப்., 1ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 14ல் துவங்கியது. இந்த தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி. அதனால், 10ம் வகுப்பு முதல், முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்ப பதிவு, நேற்று நள்ளிரவு முடிந்தது. மொத்தம், 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு கட்டணத்தை நாளைக்குள் செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இந்த தேர்வின் வாயிலாக, வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவிகளில், 6,491 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கிடையில், குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற வைத்து, வேலை வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள் சுற்றுவதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனால், தேர்வர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நியமனங்கள் அனைத்தும், தேர்வர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப் படுகின்றன. பொய்யான வாக்குறுதிகள் கூறி, குறுக்கு வழியில் வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத்தரகர்களிடம், தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களால், தேர்வர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும், தேர்வாணையம் பொறுப்பாகாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களுக்கும், விண்ணப்பதாரரே பொறுப்பாவார். விண்ணப்பித்த இணையதள சேவை மையங்களையோ, பொது சேவை மையங்களையோ குறை கூறக்கூடாது. விண்ணப்பத்தை சரிபார்த்த பின், சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U