👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் ஆணையின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புதிய பள்ளிக் கல்விப் பாடத்திட்டம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 1,6,9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 2019-20ஆம் கல்வியாண்டில் மீதமுள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2,3,4 மற்றும் 5ஆம் வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி பாடவாரியாக இரண்டு மையங்களில் நடைபெற்றது. 2,3,4,5 தொடக்க நிலை தமிழ், சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு திருச்சி மாவட்டத்திலும், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்குச் சேலம் மாவட்டத்திலும், 09.07.2019 முதல் 12.07.2019வரை ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பணி அனுபவமிக்க ஆசிரியப் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் என இரண்டு பேர் வீதம் மொத்தம் 64 பேர் முதன்மைக் கருத்தாளர்களாக பயிற்சியில் கலந்துகொண்டனர்.
அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 256பேர் பயிற்சி பெற்றனர் . இவர்கள் மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
உயர் தொடக்க நிலையில் 7ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 09.07.2019 முதல் 12.07.2019 வரை இரண்டு கட்டங்களாகப் பயிற்சி நடைபெற்றது. தமிழ் பாடத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்திலும், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் அரியலூர் மாவட்டத்திலும், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பணி அனுபவமிக்க ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு பேர் வீதம் மொத்தம் 64 பேர் முதன்மைக் கருத்தாளர்களாக பயிற்சியில் கலந்து கொண்டனர். உயர் தொடக்கநிலைப் பாடங்களுக்கு மொத்தம் 320பேர் பயிற்சி பெற்றனர்.
இப்பயிற்சியில் மாநில கருத்தாளர்களாகப் பாடப்புத்தகங்களை உருவாக்கிய பாட வல்லுநர்கள் பாட மீளாய்வாளர்கள் மற்றும் பாடநூல் ஆசிரியர்கள் பயிற்சியை வழங்கினர். முதன்மை கருத்தாளர்கள் கணினி நழுவக்காட்சி, காணொலி, மாதிரி கற்பித்தல் நிகழ்வு, ஒருங்கிணைந்த கல்வி கணினித் தொழில்நுட்பம் (ICT) மற்றும் கலந்துரையாடல் மூலமாகப் பயிற்சி சிறந்த முறையில் கருத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியில் விரைவுத் துலங்கல் குறியீடு (QR code) பயன்படுத்தி வகுப்பறையில் பாடக்கருத்துகளைத் தெளிவுபெறச் செய்யவும் கற்றலை எளிதாக்கவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியைத் தொடர்ந்து மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சியும் அடுத்தக்கட்டமாக ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி
ஜூலை மூன்றாவது வாரம் மற்றும் நான்காவது வாரத்தில் நடைபெற உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U