👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எச்.ஐ.வி. பாதித்த சிறுவனை அரசுப்பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு, பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்டது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் பதிலளிக்க, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், கொளக்காநந்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர், எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த, அந்த மாணவரை, 10ம் வகுப்பில், கொளக்காநந்தம் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க, பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி, துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: பள்ளிக்கல்வி இயக்குனர், பெரம்பலுார் கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர், நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U