👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

'மருத்துவ தரவரிசை பட்டியலில் பிற மாநிலத்தவரை நீக்கி, புதிதாக கவுன்சிலிங் நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சோம்நாத் என்பவர் தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றேன். எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளேன். தமிழகத்தில், 23 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 3,250 இடங்கள் உள்ளன. இவற்றில், 15 சதவீதம், அதாவது, 506 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.மீதி, 85 சதவீத இடங்கள், தமிழக ஒதுக்கீட்டில் நிரப்பப்படும்.
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 977 இடங்கள்; அரசு ஒதுக்கீடு, 562 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீடு, 260 இடங்கள், என்.ஆர்.ஐ., எனும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும்.அரசுக் கல்லுாரிகளில், ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங், ஜூலை, 8ல் துவங்கியது. ஜூலை, 16 - 18 வரை, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் நடக்கிறது. நிர்வாக ஒதுக்கீடு விண்ணப்ப விளக்க குறிப்பில், இருப்பிடம் குறித்து குறிப்பிடவில்லை. இதனால், வெளி மாநிலத்தினர் அதிகம் நுழைய வாய்ப்புள்ளது.
இது, அரசின் கொள்கைக்கு எதிரானது. இதுபோல், அரசு ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங், முறையாக நடக்கவில்லை. வெளிமாநிலத்தினர் பலர் பங்கேற்றுள்ளதால், அவர்கள் சீட்பெற வாய்ப்புள்ளது.கடந்த, 2018ல் வெளிமாநிலத்தினர், அரசு ஒதுக்கீட்டில், பல இடங்களை பெற்றனர். இதை, அரசு தடுக்காததால், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோனது.தமிழகத்தில் வெளிமாநிலத்தவர் படித்து, இங்கு மருத்துவ சேவை செய்வதில்லை.எனவே, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும்.
தரவரிசை பட்டியலை ரத்து செய்ய வேண்டும். பிற மாநிலத்தவரை நீக்கி, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு, புதிதாக கவுன்சிலிங் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, சோம்நாத் மனு தாக்கல் செய்தார். இதுபோல், மேலும் சிலர் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி, ஆர்.சுரேஷ் குமார் விசாரித்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரக மாணவர் சேர்க்கைக்குழு செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, ஜூலை, 22க்கு ஒத்திவைத்தார்
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கைக்கு தடை கோரிய வழக்கு தொடர்பாக, சுகாதாரத்துறைச் செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.அதில்,"தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 2744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் 1800 MBBS மருத்துவ இடங்கள் தனியார் சுய நிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ளன.
இதில் மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 மாணவர்களுக்கும், 562 இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 6 ம் தேதி தமிழகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜூலை 8 ஆம் தேதி இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.ஜூலை 15 ஆம் தேதி தனியார் சுய நிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்குகியது.
இதில் தனியார் மருத்துவ சுய நிதி கல்லூரிகளின் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.
இதனால் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் வெளி மாநிலத்திவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு இவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுவர்.
இதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை.மேலும் இந்த ஆண்டு 218 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும்.
மேலும் தமிழக இளங்கலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கவும், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U