👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல்வெளியிடப்படவுள்ளது.
இதையடுத்து தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வரும் 15, 16 ஆகிய இரு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். இரு தாள்கள் கொண்ட மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி தெரிவித்துள்ளார்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், நாளை வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, நாளை, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.பள்ளிகள் வழியாக தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளில் சான்றிதழை பெறலாம்.தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளிகளில், மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.இந்த தகவலை, தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்டுஉள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ், 10ம் தேதி கிடைக்கும்.
பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வு நடத்தப்பட்டது. இதில், சில பாடங்களில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வர முடியாதவர்களுக்கு, ஜூனில், சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில், 'மார்ச் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கு, 10ம் தேதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி அறிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்களிடத்திலும், தனியாக தேர்வு எழுதியோர், தேர்வு மையங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U