👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர், போதை கலாசாரத்துக்கு அடிமையாகி, தடம் மாறிச் செல்கின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' அளித்து, கல்வியின் அவசியத்தை உணரச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. இலவச வினா வங்கி புத்தகம் வழங்குவதோடு, சிற்றுண்டி வசதியும் செய்து தரப்படுகிறது.இதன் விளைவாக, 2018 கல்வியாண்டை காட்டிலும், 2019ல் தேர்ச்சி சதவீதம், மெச்சத்தகுந்த அளவில் சற்று அதிகரித்திருக்கிறது. இருந்தாலும், சில குறிப்பிட்ட பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கல்விப்பிரிவினர் ஆய்வுபோதுமான ஆசிரியர்கள் இல்லையா, கல்வி கற்பித்தலில் பிரச்னை இருக்கிறதா என, பல வழிகளிலும் கல்வி பிரிவினர் ஆய்வு செய்தனர். மாணவர்களின் பழக்க வழக்கம், நட்பு வட்டாரம், குடும்ப சூழல் மற்றும் ஆர்வமின்மையால், தேர்ச்சியில் பின்தங்கியிருப்பது தெரியவந்தது.மாணவர்களில் சிலர், போதை கலாசாரத்துக்கு அடிமையாகி, தடம் மாறிச் செல்வதும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், அத்தகைய மாணவர்கள் மீது, பெற்றோரும் கவனம் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது.இத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, கூடுதல் கவனம் செலுத்த கல்விப்பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணரச் செய்து, 'கவுன்சிலிங்' கொடுத்து, படிப்பின் மீது ஈர்ப்பு வரும் படி, பழக்க வழக்கத்தை மாற்றுமாறு, மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் ஆர்வமுள்ள, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், நேற்று தேர்வு முடிவு வெளியானதும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் வரவழைத்து, அதிக தேர்ச்சி பெற்றதற்கு, பாராட்டு தெரிவித்தார்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும், சர்வதேச தரத்துக்கு கற்பிக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியுள்ளார். இம்முயற்சி, வரும் கல்வியாண்டில், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரித்துக் காட்டும் என நம்பலாம்.2018 கல்வியாண்டை காட்டிலும், 2019ல் தேர்ச்சி சதவீதம், மெச்சத்தகுந்த அளவில் சற்று அதிகரித்திருக்கிறது. இருந்தாலும், சில குறிப்பிட்ட பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாணவர்களில் சிலர், போதை கலாசாரத்துக்கு அடிமையாகி, தடம் மாறிச் செல்வதும், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், அத்தகைய மாணவர்கள் மீது, பெற்றோரும் கவனம் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U