👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், அலுவலர்கள் வருகை பதிவானது ஜூன் முதல் பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக 24 மாவட்டங்களில் இது அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள் தோறும், பயோமெட்ரிக்., கருவி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 82 பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்துள்ளது.பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கூட்டம் திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலை பள்ளியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் தலைமை வகித்தார். கல்வி மாவட்ட அலுவலர்கள் முத்துக்கிருஷ்ணன், சுப்பிரமணியன் பங்கேற்றனர். பயோ மெட்ரிக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், முபாரக் பயிற்சி அளித்தனர். தலைமை ஆசிரியர்கள் ராமானுஜம், மதிவாணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.இந்த வருகை பதிவு கருவியானது தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும் கணினியுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதில் ஜி.பி.எஸ்., வசதி இருக்கும் என்பதால் இதை வேறு எங்கும் எடுத்துச் சென்று வருகை பதிவு செய்ய இயலாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U