👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
வரி செலுத்துநர்களின் விபரங்கள் கோரி, ஒருபோதும், எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில்கள் அனுப்பப்படுவது இல்லை என வருமானவரித்துறை தெரிவித்திருக்கிறது. போலி எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில்களை கண்டு ஏமாற வேண்டாம் என எச்சரித்திருக்கிறது.
சென்னை வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் இளவரசி, வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி செலுத்துநர்களுக்கு, பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மீண்டும் பெறுவதற்கு குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்யவும் எனக் கூறி, வருமானவரித்துறை பெயரில், எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் அனுப்பப்படுவதாகவும், இதுகுறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, Refund என்ற பெயரில் வரும் SMS அல்லது இ-மெயில்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துநர்களிடம், பின் நம்பர் (PIN Number), ஓ.டி.பி(OTP) எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல், வழக்கமான கடவுச்சொல் ஆகியவற்றை ஒருபோதும் வருமானவரித்துறை கேட்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, வரி செலுத்துநர்களின், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், வங்கி கணக்கு விவரங்கள், வாடிக்கையாளர் எண், ஏடிஎம் பின் ஆகியவற்றை வருமானவரித்துறை இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் வாயிலாக கேட்பது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான விவரங்களை கோரி, வருமானவரித்துறை பெயரில் யாராவது, எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் அனுப்பினால், நம்பி ஏமாற வேண்டாம் என்றும் வருமானவரித்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.
வரி செலுத்துபவர்கள், தங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும், www.incometaxindiaefiling.gov.in, என்ற தங்களின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U