Breaking

Thursday, July 12, 2018

அரசு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்பு: வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


அரசு விளையாட்டு விடுதிகளில் சேர, ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர், விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்காக, நல்ல பயிற்சி, தங்குமிடம், உணவுடன் கூடிய, முதல்நிலை விளையாட்டு மைய விடுதிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாணவர்களுக்கும், சென்னை, ஈரோடு ஆகிய இடங்களிலும் மாணவியருக்கும் விடுதிகள் செயல்படுகின்றன.

இதில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், 2018- -19க்கான சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை, இன்று முதல், மாவட்ட விளையாட்டு அலுவலர்களை அணுகி பெறலாம். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தேசிய, மாநில அளவில், வெற்றி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், 18ம் தேதி காலை, 8:00 மணிக்குள், மாநில தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog