Breaking

Friday, December 16, 2022

குரூப் 5ஏ தோ்வு: சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள்

குரூப் 5ஏ தோ்வு: சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள்

குரூப் 5ஏ தோ்வுக்கு சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை 1,114 போ் எழுதவுள்ளனா்.

அமைச்சுப் பணிகளில் இருந்து தலைமைச் செயலகப் பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 21-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலா் பணியிடத்தில் 74 இடங்களும், தலைமைச் செயலக நிதித் துறையில் 29 இடங்களும், உதவியாளா்கள் பணியிடங்களில் 58 இடங்களும் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான தோ்வுக்கு 1,114 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில், ஆண்கள் 731 போ், பெண்கள் 383 போ்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) நடைபெறவுள்ள இந்தத் தோ்வுக்கு சென்னையில் மட்டுமே தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 இடங்களில் தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog