Breaking

Sunday, March 29, 2026

இளம் வாக்காளர்களை கவர்ந்த கணித ஆசிரியரின் பாட்டு - சமூக வலைதளங்களில் வைரல்

இளம் வாக்காளர்களை கவர்ந்த கணித ஆசிரியரின் பாட்டு - சமூக வலைதளங்களில் வைரல் Math Teacher's Song Captivates Young Voters — Goes Viral on Social Media



A mathematics teacher from Trichy district has gone viral on social media for creating a folk-style song to encourage young and eligible voters to cast their ballots. He composed and sang the awareness song himself to motivate 100% voter turnout.

Awareness Creator: Gandhi, a 58-year-old mathematics teacher from Sevalpatti village, created a viral voter awareness song.

Message: The song urges eligible citizens to vote consciously in the upcoming elections, emphasizing that voting is a democratic duty.

Inclusivity: The song mentions that special facilities are available to assist elderly, pregnant, and disabled voters

துவரங்குறிச்சி, மார்ச் 29: திருச்சி மாவட்டம்

துவரங்குறிச்சி அடுத்த செவல்பட்டி சேர்ந்த ஆசிரியர் காந்தி (58). இவர் மருங்காபுரி ஒன்றியம் தாளம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர், தற்போது சமூக வலைத்த களில் ஓட்டுபோடும் தகுதி யுள்ள வாக்காளர்களை 100% கண்டிப்பாக வாக்களியுங்கள் என்று கூறி விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி, அவரே அந்த பாட லுக்கு இசை அமைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரல் ஓட்டு போடும் தகுதியுள்ள வாக்களரே கேளுங்களே!,

வருகின்ற தேர்தலிலே வாக்களிக்க வேணுங்களே !

மறக்காம ஓட்டு போடணும் வாருங்களே!

100% வாக்களிப்போம் என்றுதானே கூறுங்களே!

விரல் நுனியிலே தீர்ப்பு எழுத வேணுங்க!

எதிர்காலக் குரலாய் வாக்குகளும் இருக்கு துங்க!

கடமையை செய்வது ஜனநாயகம்!

மனசாட்சி படி ஓட்டுகளை போடணும்!

மாற்றுத்திறனாளியும், முதியோர், கர்ப் பிணியும் ஓட்டு போட வசதியிருக்கு கவ லைப்பட தேவையில்லை முன்னுரிமை

கிடைக்கும் வாருங்க! நாம கட்டாயம் ஓட்டுப் போடணும் கேளுங்க.

ஓட்டுப் போடாமல் இருப்பது பெருமை யல்ல!

தேர்தலே வேணாம்னு ஒதுங்குவது சரியில்ல.

உரிமையை காக்க வேணும் வாருங்க!

அதுக்கு எல்லோரும் வாக்களிப் போம் சேருங்க !

எல்லோரும் ஓட்டுப் போட ணும் கேளுங்க!

என்று பதிவிட்டுள்ளார்.

இது இளம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog