PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 28, 2023

Comments:0

PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!!



You can claim the full PF amount even before attaining the age of 58, if you have retired from your service and you have been unemployed for straight two months (60 days).


PF பணத்தை எப்போது எல்லாம் எடுக்க முடியும்?? அதற்கான வழிமுறைகள்!! - When can I withdraw all PF money?? Instructions for that!!

பிஎஃப் என்பது ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பிடிப்பது ஆகும்.

இவ்வாறு பிடித்த இந்த தொகையை சேகரித்து நமக்கு வழங்குவார்கள்.

எனவே, இந்த தொகையை நாம் நினைத்த நேரம் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது.

அதன்படி, இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே இந்த பிஎஃப் தொகையை நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதாவது, ஊழியர் வேலையே இல்லாமல் இரண்டு மாதங்கள் இருந்தால் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றொன்று, ஊழியர் வேலையில் இருந்து ஈயவு பெற்ற பிறகு எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது அவசர காலத்தில் பணம் தேவைபட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் இதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. மேல்படிப்பு படிப்பதற்கு பணம் தேவைப்பட்டால் வேலைவாய்ப்பு பங்களிப்பில் இருந்து 50% எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு வருடமாவது பணி புரிந்திருக்க வேண்டும். மேலும் மாத ஊதியம் ஆனது 15 ஆயிரத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த பிஎஃப் பணமானது தனிப்பட்ட நபருக்கு மட்டும் அல்லாமல் அந்த நபரின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போகும்போதும் கூட இந்த பிஎஃப் பணத்தை அவர்கள் படிப்பு செலவிற்காக நாம் எடுத்து பயன்படுத்த முடியும்.

இதே போல் நாம் ஒரு வீடு கட்டுவதற்கோ அல்லது நிலம் வாங்குவதற்கு கூட இந்த பி எஃப் தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 5 வருடங்கள் ஆவது அங்கு பணி புரிந்திருக்க வேண்டும். இந்த பிஎஃப் தொகையை 24 இல் இருந்து 36 முறை மாத வாரியாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏற்கனவே சொந்த வீடு இருந்து அதற்கு ஏதாவது செலவு செய்ய நினைத்தாலும் இந்த பிஎஃப் தொகையை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கும் ஐந்து ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். இவ்வாறு பிஎப் தொகையை எடுத்து இதற்கு பயன்படுத்தலாம் என்று தெரியாமல் வங்கியில் லோன் வாங்கி இந்த வேலைகளை செய்திருந்தால் கூட இந்த பி எஃப் தொகையை எடுத்து லோனை கட்ட முடியும்.

இதற்கு அந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டு மட்டும் பணிபுரிந்தாலே போதும். மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பிலிருந்து 90% பெற்றுக் கொள்ளலாம்.

பிஎஃப் தொகைக்கு உரிய நபரின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் அந்த நபரின் தங்கை தம்பி குழந்தைகள் என அனைவரும் தேவைகளுக்காகவும் கூட இந்த pf தொகையை தாராளமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்வதற்கு அந்த நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் நாம் பணிபுரிந்து இருக்க வேண்டும் மேலும் வேலைவாய்ப்பு பங்களிப்பில் 50% பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews