Breaking

Tuesday, May 19, 2026

தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்



தமிழக அரசு வழங்கும் தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் You can apply for the Entrepreneurship Certificate Course offered by the Government of Tamil Nadu.

அகம​தா​பாத் நிறு​வனத்​துடன் இணைந்து தமிழக அரசு வழங்​கும் ஓராண்டு தொழில்​முனை​வோர் சான்​றிதழ் படிப்​புக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. இதற்​கான வகுப்​பு​கள் ஜூன் 15 முதல் தொடங்​கு​கின்​றன.

தமிழக அரசின் குறு, சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​கள் (எம்​எஸ்​எம்இ) துறை​யின் கீழ் இயங்​கும் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில், ஓராண்டு தொழில்​முனை​வோர் மற்​றும் புத்​தாக்க சான்​றிதழ் கல்விக்​கான குழு மாணவர் சேர்க்கை தொடங்​கி​யுள்​ளது.

இந்த படிப்​பானது குஜ​ராத் மாநிலம், அகம​தா​பாத்​தில் உள்ள புகழ்​பெற்ற இந்​திய தொழில்​முனை​வோர் மேம்​பாட்டு நிறு​வனத்​துடன் இணைந்து நடத்​தப்​படு​கிறது.

தமிழ்​நாடு தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தின் உள்​ளூர் தொழில் சூழல் மற்​றும் அகம​தா​பாத் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தின் உலகத்​தரம் வாய்ந்த பாடத்​திட்​டம் ஆகிய​வற்றை ஒன்​றிணைத்​து, மாணவர்​களுக்கு நேரடித் தொழில்​முறை பயிற்​சிகளை​யும் இந்த சான்​றிதழ் கல்​வி​யானது வழங்​கு​கிறது. கடந்த 2 ஆண்​டு​களின் வெற்​றிகர​மான செயல்​பாடு​களைத் தொடர்ந்​து, இந்த 3-வது குழு மாணவர்​களுக்கு மேலும் மேம்​படுத்​தப்​பட்ட புதிய பாடத்​திட்​டம் வழங்​கப்​பட​வுள்​ளது.

இந்த திட்​டத்​தின் கீழ் பயிலும் மாணவர்​களுக்கு அகம​தா​பாத் புத்​தாக்க நிறு​வனத்​தின் பேராசிரியர்​கள் மற்​றும் தொழில்​துறை வல்​லுநர்​கள் நேரடி​யாக வழி​காட்​டு​வார்​கள்.

அத்​துடன் நவீன திறன் வகுப்​பறை​கள், நூலக வசதி​கள் மற்​றும் களப்​பயணங்​கள் மூலம் நிஜ உலக வணி​கச் சூழலை நேரடி​யாக கற்​றுக்​கொள்​ளும் வகை​யில் பயிற்​சிகள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

இப்​படிப்​பில் சேர பட்​ட​தா​ரி​கள் அல்​லது தொழில்​துறை பயிற்சி முடித்து சொந்​த​மாகத் தொழில் தொடங்க ஆர்​வ​முள்ள, 21 முதல் 40 வயதுக்கு உட்​பட்ட நபர்​கள் https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணை​யதளம் வாயி​லாக விண்​ணப்​பிக்​கலாம். கல்விக் கட்​ட​ண​மாக ரூ.80 ஆயிரம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கான வகுப்​பு​கள் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி​முதல் தொடங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

கூடு​தல் விவரங்​களுக்கு 8668101638 என்ற எண் அல்​லது academy@editn.in என்ற மின்​னஞ்​சல்​ முகவரியைத்​ தொடர்​பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog