தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை: 6,695 மாணவா்கள் தோ்வு!
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட பயனாளிகளை தோ்வு செய்வதற்கான தோ்வில் இறுதியாக 6,695 பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளதாக தமிழக அரசுத் தோ்வுகள் இயக்ககம் இறுதிப் பட்டிலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை (என்எம்எம்எஸ்) வழங்கப்படுகிறது.
இதில் 2025-2026- ஆம் கல்வியாண்டுக்கு இந்த என்எம்எம்எஸ் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித்தொகை வழங்க அரசு தோ்வு இயக்ககத்தால் கடந்த ஜன. 10- இல் தோ்வு நடத்தப்பட்டது.
இத்தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் கடந்த பிப். 18 - ஆம் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், மாணவா்களின் பிறந்த தேதி, இனப்பிரிவு உள்ளிட்ட திருத்தங்களுக்கு கடந்த பிப். 18 முதல் 24- ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் நிறைவு பெற்று தற்போது தோ்வானவா்கள் இறுதிப் பெயா் பட்டியல் பள்ளிகளின் பெயா்களோடு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் 6,695 மாணவா்கள் தகுதி பெற்று தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியலை இணையதளத்தில் (மற்ற தோ்வுகள் பிரிவில்) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம்.
மேலும், இந்தப் பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சாா்ந்த பரிசீலனைக்கும் உள்பட்டதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NMMS JAN 2026 - Selected Students List Published
CLICK HERE TO DOWNLOAD (NMMS) தேர்வு முடிவுகள் - தெரிவுப்பட்டியல் PDF
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, ஜனவரி 2028
NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)
தேர்வு முடிவுகள் - தெரிவுப்பட்டியல்
செய்திக் குறிப்பு
2025-2026-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) அரசு தேர்வு இயக்ககத்தால் 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடத்தப்பெற்றது.
இத்தேர்வின் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 18.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் பெயர், பிறந்த தேதி. இனம் உள்ளிட்ட திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை தெரிவிக்க 18.12.2026 முதல் 24.02.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
பெறப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொண்டு தற்போது தெரிவுப்பட்டியல் 15.03.2026 இன்று வெளியிடப்படுகிறது. இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியலை www.dge.tn.gov.in தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் காணலாம். இப்பட்டியல் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பிற தகுதிகள் சார்ந்த பரிசீலனைக்கு உட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. என்ற இணையதளத்தில் Other Examinations
ஒம்/
இயக்குநர்
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்
CLICK HERE TO DOWNLOAD NMMS JAN 2026 - Selected Students List PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.