அரசாணை வெளியிட்டும் அமலுக்கு வராத ஓய்வூதிய உயர்வு
சத்துணவு அமைப்பாளர்கள் ஏமாற்றம்
விருதுநகர், மார்ச் 13 தமிழகத்தில் சத்துணவு
அமைப்பாளர்கள், அங்கள் வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ.2000 ஆக இருந்த ஓய் வூதியத்தை ரூ.3400 ஆக உயர்த்தி அரசாணை வெளி யிட்ட நிலையில் பிப். மாதத்திற்கான ஓய்வூதிய மாக ரூ.2000 வரவு வைக் கப்பட்டது. அரசாணை வெளியிட்டும் ஓய்வூதிய உயர்வு இன்னும் அமலுக்கு வரவில்லை லை என கடும் ஏமாற்றத்தில் சத்துணவு அமைப்பாளர்கள். அங் கன்வாடி ஓய்வூதியர்கள் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஜன.24ல் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியம் ரூ.2000, ஓய்வு பெற்ற அமைப்பாளர், பணி யாளர்களுக்கு ரூ.2000
ஆகிய ஓய்வூதியங்களை ரூ.3400 ஆகவும், குறு அங் கன்வாடி பணியாளருக்கு ஓய்வூதியம் ரூ.2000 என் பதை ரூ.3000 ஆகவும், உதவியாளர், சமையல ருக்கு ஓய்வூகியம் ரூ.2000 என்பதை ரூ.3000 என்றும் உயர்த்தி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.
உயர்த்திய ஓய்வூகியத் திற்கான அரசாணை பிப். 13ல் வெளியிடப்பட்டது. முதல்வரின் அறிவிப்பின் படி உயர்த்தப்பட்ட பிப். மாதத்திற்கான ஓய்வூகியம் ரூ.2000 ஆக மட்டுமே மார்ச்சில் வழங்கப்பட்டு உள்ளதால் ஓய்வூதியர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைத்துள்ளனர்.
அமலுக்கு வருகிறதா அல்லது பிப்ரவரி முதல் வெளியிடப்பட்ட அர சாணையில் ஜனவரி முதல்
அமலுக்கு வருகிறதா என்று அரசாணையில் தெரி யப்படுத்தப்படவில்லை.
மேலும் உயர்த்திய ஓய்வூ தியத்திற்கான தொகை சம் பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் திற்கான தொகை சம் பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதா அல்லதுஎப்போது அனுப்பி வைக்கப்படும் விவரம் தெரியவில்லை. என்ற
அரசாணையின் பலன் கள் ஓய்வூதியருக்கு எப் போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. இதனால் முதல்வரின் அறிவிப்பு வெறும் காகித பூ தானா என அங்கன்வாடி, சத் துணவு ஓய்வூதியர்கள் புலம்புகின்றனர்.
Friday, March 13, 2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.