மகளிருக்கு மாதம் ரூ. 2,000! ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து - அதிமுக முதற்கட்ட 5 வாக்குறுதிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 17, 2026

Comments:0

மகளிருக்கு மாதம் ரூ. 2,000! ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து - அதிமுக முதற்கட்ட 5 வாக்குறுதிகள்



Rs. 2,000 per month for women! Free bus travel for men - AIADMK's initial 5 promises மகளிருக்கு மாதம் ரூ. 2,000! ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து - அதிமுக முதற்கட்ட 5 வாக்குறுதிகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

1. வாக்குறுதி

மகளிர் நலன்: குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப மகளிர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவி தொகையாக ரூபாய் 2000 ரூபாய் வழங்கப்படும். குடும்ப தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 2.வாக்குறுதி

ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து சேவை திட்டம் அமல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மகளிர் இலவச பேருந்து பயணம் தொடரும்

3. வாக்குறுதி

இலவச வீடு: அம்மா கனவு திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு அரசியல் நிலம் வாங்கி வீடு கட்டி தரப்படும் அதேபோல் நகர பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்கு மாடி வீடுகள் கட்டி தரப்படும்.

4.வாக்குறுதி

நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தி செயல்படுத்தப்படும்.

5. வாக்குறுதி

மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்.. இருசக்கர வாகனமகள் இருக்கு ரூபாய் 25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews