பத்தாம் வகுப்பிலும் வேண்டும் அகமதிப்பெண் நடைமுறை
ஆசிரியர்கள் வலியுறுத்தல்
'பிளஸ் 2வில் உள்ளது போல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாணவர்களுக்கும் அகமதிப் பெண் வழங்கும் முறை அமல்படுத்த வேண்டும்' என ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள் ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு தலா 10 அகம திப்பெண் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 90 மதிப்பெண்களுக்கு விடையெழுத வேண் டும். அறிவியல் பாடத்தில் அகமதிப்பெண் 10, செய்முறை தேர்வுக்கு 20 என 30 மதிப்பெண் வழங்கப்படுகிறது. 70 மதிப்பெண்ணுக்கு விடை யெழுதும் நடைமுறை தற்போது உள்ளது.
பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் செய் முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண் வழங்கப்ப டுகிறது. மீதம் 75 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடக்கிறது. அறிவியல் தவிர தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கு அசு மதிப்பெண் வழங்கும் நடைமுறை இல்லை. எனவே தலா 10 அகமதிப்பெண் வழங்கி, 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தும் முறையை பொதுத் தேர்வில் பின்பற்ற வேண்டும் என ஆசி ரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநி லப் பொதுச் செயலர் இளங்கோ கூறுகையில்,
"மேல்நிலையில் உள்ள நடைமுறையை பத்தாம் வகுப்பிலும் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயனடைவர். இதுகுறித்து முதல்வர், கல்வி அமைச்சருக்கு சங் கம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கல் வித்துறை பரிசீலிக்க வேண்டும் என்றார்.
Friday, November 14, 2025
பத்தாம் வகுப்பிலும் வேண்டும் அகமதிப்பெண் நடைமுறை - ஆசிரியர்கள் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.