பொதுத்தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும்
தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
+ "பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்திற்கும் மேல் உள்ளதால் மாணவர்கள் சிர மத்திற்குள்ளாகின்றனர். அவர்கள் நலன் கருதி நேரத்தை குறைக்க வேண்டும்," என, தமிழக அரசுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் லில் சங்க மாநில துணைத்த லைவர் விஜய் கூறியதாவது: தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வில் 3 மணி நேரம் எழு துவதற்கும், 10 நிமிடங்கள் வாசிப்பிற்கும், 5 நிமிடங்கள் பூர்த்தி செய்வதற்கும் என + 3:15 1 மண மணி நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இத னால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.
மொழிப்பாடத்தேர்வுகள் 90 மதிப்பெண்க ளுக்கும், செய்முறை விளக்கம் உள்ள பாடங் களான விலங்கியல், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் 70 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 3:15 மணி நேரம் என்பது அதிகமாக உள் ளது. நீண்ட நேரம் அறையில் காத்திருப்பில் சிர மத்திற்குள்ளாகின்றனர்.
வரும் காலங்களில் 2:30 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கும், 10 நிமிடங்கள் வாசிப்பிற்கும், 5 நிமிடங்கள் பூர்த்தி செய்ய என 2:45 மணி நேரம் என மாற்றினால் இதுபோன்ற சிரமங்கள் தவிர்க் கப்படும் என்றார்.
Friday, November 14, 2025
பொதுத்தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் - தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.