மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
சட்டசபை தேர்தலுக்கு பின் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்குவதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கப்பட்டு உள்ளது. நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடக்காத பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2026 ஏப்ரலில் துவங்கி 2027 மார்ச்1க்குள் இப்பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்த பின் ஆகஸ்டில் இப்பணிகள் துவங்க உள்ளன. முதற்கட்டமாக வீடுகளின் பட்டியல், வீடுகளில் உள்ள வசதிகளின் விபரங்களையும், இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் நடக்க உள்ளன. 'டிஜிட்டல்' பணிகள்: முதல் முறையாக டிஜிட்டல் முறை யில் தரவுகள் பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக அலைபேசி செயலிகள் உருவாக்கப்பட்டு ஒரு மேற்பார்வையாளர், 6 களப்பணியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வீட்டுவசதி கணக்கெடுப்பில் ஒரு குழு 400 வீடுகள் என்ற கணக்கில் தரவுகளை சேகரிக்க உள்ளனர். கணக்கெடுக்கும் பகுதியின் வரைபடங்களும் பதிவேற்றப்படுகின்றன.
இத்தரவுகள் மக்கள் தொகை மேலாண்மை, கண்காணிப்பு அமைப்பு https://cms.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாவட்டந்தோறும் கணக்கெடுப்பு கண்காணிப்பு அலுவலர்களாக கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்கள் பணிநிலை அலுவலர்கள், துணை கண்காணிப்பு அலுவலர்களாகவும், தாசில்தார்கள் கண்காணிப்பு மேற்பார்வை அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுய பதிவு, டிஜிட்டல் இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் முதன் முறையாக சுய பதிவு மூலம் பாலினம், வயது உட்பட 32 வினாக்களுக்கு பொதுமக்களே நேரடியாக விடையளிக்க வேண்டும். இது தொடர்பாக திண்டுக்கல்லில் நடந்த முதல் ஆயத்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது: சுயபதிவு முறையும், ஜாதிவாரி கணக்கெடுப்புத் தரவுகளும் ஏற்படுத்தப்படும். சுயப்பதிவு செய்திருந்தாலும் கணக்கெடுப்பாளர் தரவுகளை பதிவு செய்ய வருவார். டிஜிட்டல் தரவுகள், வரைபடங்களாக பதிவேற்றப்படுவதால் மிகத்துல்லிய விபரங்கள் கிடைக்கும். பயிற்சிகள் துவங்கி உள்ளன. தேர்தலுக்கு பின் ஆகஸ்டில் இப்பணிகள் துவங்கும் என்றனர்
2026-27-ல் நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக (Census 2027), தமிழ்நாடு முழுவதும் உள்ள கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு பல்வேறு நிலைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி விவரங்கள்:
பயிற்சி படிநிலைகள் (Training Cascade):
தேசிய அளவிலான பயிற்சியாளர்கள் (National Trainers): இவர்கள் மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு (Master Trainers) பயிற்சி அளிக்கின்றனர்.
முதன்மை பயிற்சியாளர்கள் (Master Trainers): மாவட்ட அளவிலான களப் பயிற்சியாளர்களுக்கு (Field Trainers) பயிற்சி வழங்குகின்றனர்.
களப் பணியாளர்கள் (Enumerators & Supervisors): சுமார் 1.9 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் களப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
டிஜிட்டல் கருவிகள்: முதன்முறையாக மொபைல் ஆப் (HLO Mobile App) மற்றும் போர்ட்டல்கள் (CMMS, HLBC) வழியாக தரவுகளைச் சேகரிக்கும் முறை குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது.
வினாடிப் பட்டியல்: வீட்டடிப் பட்டியல் (Houselisting) தொடர்பான 33 கேள்விகளை எப்படிக் கேட்பது மற்றும் பதில்களைப் பதிவு செய்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
பண்புக்கூறுகள்: பொதுமக்களிடம் மென்மையாகவும், நடுநிலையாகவும் நடந்து கொள்வது மற்றும் தரவுகளின் ரகசியத்தை காப்பது போன்ற சமூகத் திறன்களும் போதிக்கப்படுகின்றன.
கால அட்டவணை (Tamil Nadu):
தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் (DCO TN) அலுவலர்களுக்கான 3 நாள் உள்வட்டப் பயிற்சி ஜனவரி 20-22, 2026 வரை சென்னையில் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட அலுவலர்களுக்கான பயிற்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2026-ல் களப்பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் (DCO TN) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
Thursday, February 12, 2026
Census 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
National Trainers
Labels:
AI Training,
Block level Training Schedule,
Census 2027,
CRC Training,
Enumerators & Supervisors,
Latest News,
Master Trainers,
National Trainers
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.