Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers - தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 15, 2022

Comments:0

Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers - தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள். - Primary School – 3 days training for all teachers – SCERT Director's Procedures.

SCERT Director's Procedures for Providing Second Semester Numeracy and Literacy Training for Primary School Teachers from 6th to 8th October தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006.

ந.க.எண்: 2411/ஈ2/2021 நாள். 4. .09.2022

பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022- 2023 எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் சார்பு.

இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2411/ஈ2/2021, நாள்.09.09.2022.

பார்வை :

பார்வையில் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டாம் பருவத்திற்கான மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சியை தொடர்ந்து மாவட்ட அளவிலான எண்ணும், எழுத்தும் சார்ந்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சி 27.09.2022 முதல் 29.09.2022 வரை நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ப தங்கள் மாவட்டங்களில் உள்ள ஒன்றியத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தகுந்த ஆர்வமிக்க, கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபாடுடன் செயல்படும் DIET கல்வியாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி இடத்தினை தேர்வு செய்தும், ஒரு பயிற்சி அறைக்கு 40 நபர்களுக்கு மிகாமலும், பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், முதன்மை கருத்தாளர் பயிற்சி முடிந்த பின் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருள்கள் செய்யும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கற்றல் கற்பித்தல் பொருள்கள் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் DIET முதல்வர்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கான உத்தேச செலவினம் இணைப்பு - 1ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிக்கு தங்கள் '

மாவட்டத்தில் இருப்பிலுள்ள தொகை போக மீதமுள்ள செலவினத்திற்கு இந்நிறுவன Diksha நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, தங்கள் நிறுவனத்தில் திட்ட நிதி மற்றும் மானிய நிதியில் இருப்பிலுள்ள தொகையின் விவரம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பு 2-ல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக tnscertdsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், இணைப்பு -3ல் உள்ள படிவத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சிகளின் விவரம் சார்ந்த அட்டவணையை பூர்த்தி செய்து உடனடியாக tnscert2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.



1. அரசு முதன்மை செயலாளர். பள்ளிகல்வித்துறை, தலைமை செயலகம் .

சென்னை - 09 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளி கல்வி ஆணையரகம்,

சென்னை-6. தங்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. 3. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி, சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

4. தொடக்கக்கல்வி இயக்குநர் சென்னை -06 தங்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews