18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் கட்ட திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 19, 2022

Comments:0

18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் அரசு பள்ளிகளில் கட்ட திட்டம்

* 'இல்லம் தேடி கல்வி' என்ற முன்னோடி திட்டம், 38 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது; 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைகின்றனர். வரும் நிதியாண்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்த, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க, 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகளை, அரசு துவங்கியுள்ளது. வரும் நிதியாண்டில், மேலும் 15 மாவட்டங்களில், முன்மாதிரி பள்ளிகள் துவங்கப்படும். இதற்கு, 125 கோடி ரூபாய் செலவிடப்படும்

இதையும் படிக்க | அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் படிக்க உதவி

* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் உட்பட, அனைத்து அரசு பள்ளிகளையும் நவீனமயமாக்க, 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்' ஏற்படுத்தப்படுகிறது.இதில், அரசு பள்ளிகளில், புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்; கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். வரும் நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழறிஞர் பெயரில் நுாலகம்

பொது நுாலகங்களை மேம்படுத்த, உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. ஆறு புதிய மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளில், 36 கோடி ரூபாய் செலவில், மாவட்ட மத்திய நுாலகங்கள் ஏற்படுத்தப்படும். இந்த நுாலக கட்டடங்களுக்கு, தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்

புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல, சென்னையை போன்று, மற்ற மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படும். தமிழ் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்கு, வரும் நிதி ஆண்டில், 5.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews