தமிழக திறந்தநிலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தாமதமாகி உள்ளதால், பட்டதாரிகள் பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள், தங்களுக்கான பதவி உயர்வு மற்றும் உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறும் வகையில், தொலைநிலையில் முதுநிலை படிப்புகள் படிக்கின்றனர். அதேபோல், தனியார் துறையில் பணியாற்றுவோரும், தங்களின் கல்வி தகுதியை உயர்த்தி கொள்ள, தொலைநிலை கல்வியில் படிக்கின்றனர்.
இந்த வகையில், தமிழக திறந்தநிலை பல்கலையில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக பட்ட சான்றிதழ்கள் வரவில்லை என, புகார் எழுந்துள்ளது. 2019 மற்றும் 2020ல் படிப்பை முடித்த தரப்பினருக்கு, இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை.
'பட்டமளிப்பு விழா நடத்திய பின் சான்றிதழ் வழங்கப்படும்' என, பல்கலை தரப்பில் கூறுவதாக, பட்டதாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே, தமிழக திறந்தநிலை பல்கலை தரப்பில் 'ஆன்லைன்' வழியிலாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்தி, சான்றிதழ் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.