Breaking

Wednesday, October 06, 2021

நல்லாசிரியர் விருது தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கிய அரசு பள்ளி ஆசிரியை

அரசு பள்ளி ஆசிரியை நல்லாசிரியர் விருது தொகையை பள்ளி வளர்ச்சிக்கு வழங்கல்

நாகை, அக்.6: நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரிய ராக பணியாற்றுபவர் விஜயசாமுண்டீஸ்வரி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். நாகை லெக்டர் அலுவலகத் தில் நடந்த விழாவில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. எஸ்.விஜயன் பதக்கம், சான்றிதழ், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கி னார். இந்நிலையில் நல்லா சிரியர் விருது பெற்ற ஆசிரியர் விஜயசாமுண் டீஸ்வரிக்கு பாராட்டு விழா நேற்று நாகை காடம் பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது. இவ்விழாவில் பள்ளி வளர்ச்சிக்காவும், மாணவர்கள் நலன் கரு தியும் ரூ.10 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் இளமாறனிடம் வழங்கி னார்.இதை தொடர்ந்து ஆசிரியர் விஜயசாமுண் டீஸ்வரியை அனைவ ரும் பாராட்டினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog