Breaking

Tuesday, October 05, 2021

கேரளாவில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு: ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதி

கேரளாவில் நவ.1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 1 முதல் 7ம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 10 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு நிபந்தனைகளில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அடுத்த வாரம் முதல் முதல் 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 1ம் தேதி முதல் 1 முதல் 7ம் வகுப்புகள் மற்றும் 10, 12 வகுப்புக்கள் தொடங்குகின்றன. 8, 9, 11 வகுப்புகளுக்கு நவம்பர் 15 முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. இதற்கிடையே பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். இதில், 1 முதல் 7 வகுப்புகளில் அதிகபட்சமாக 10 மாணவர்களையும்.

8ம் வகுப்புக்கு மேல் 20 மாணவர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் ஒரு பெஞ்சில் ஒரு மாணவரும், 8ம் வகுப்பு மேல் ஒரு பெஞ்சில் 2 மாணவர்களும் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து வகுப்புகளும் மதியம் வரை மட்டுமே நடத்தப்படும். சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog