தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வான சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும் என கவின்கலை பட்டதாரி நலச் சங்கத் தலைவர் P.அய்யாவு, கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2017 – ஆம் ஆண்டு செப்டம்பர் 23- ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விக்கான சிறப்பாசிரியர் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. 2018- ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பின்னர் தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இதில் 20% தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்ச்சிப்பெற்றவர்களின் பட்டியலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், தமிழ்வழி இடஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களைத் தவிர மற்ற 240 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. பின்னர், தமிழ்வழி இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
முறைப்படி அரசு கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் தமிழ்வழியில் படித்த சான்றிதழ்கள் வைத்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் 06/07/2021 திருக்குவளை வந்த முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது என்பதை தெரிவித்தார்
இதை தவிர, தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழ ங்க த தால் சிறப்பாசிரியர் பணியிடங்களில் 20% பணியிடங்கள் காலியாகவே உள்ளன.எனவே, இது குறித்து விரைவான பரிசீலனை மேற்கொண்டு, உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.