Breaking

Friday, September 10, 2021

பள்ளிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க உத்தரவு

பள்ளிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க உத்தரவு

கரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கரோனா தொற்று தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து பள்ளிகளை படிபடியாக திறக்க முடிவானது. அதன்படி முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த செப். 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மாணவர்கள் நலன்கருதி சில கூடுதல் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி மாணவர்கள், ஆசிரியர்கள் மற் றும் இதர பணியாளர்கள் பள்ளிகளுக்குள் நுழையும்போதே வெப்ப மானி கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண் டும். அப்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பின் அவர் களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது. அருகே உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து அவர்கள் அறிவுறுத்தலின்படி செயல்பட வேண்டும். அதேபோன்று மாணவர்கள் உள்பட அனைவரும் பள்ளி வளாகத் துக்குள் நுழையும்போது கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய் வதை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகும். அதனுடன் பள்ளி வளாகங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இதுதவிர பள்ளி வேலை நேரங்களின் போது கூட்டம் சேருவதை தவிர்ப்பதுடன், வெளிநபர்கள் பள்ளிக்குள் நுழைவதையும் அனும திக்கக்கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல் பட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog