மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்' என, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன் தெரிவித்தது: திண்டுக்கல்லில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. மாநில நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 4, வேடசந்துாரில் 3, வத்தலக்குண்டில் 2, பழநியில் ஒருவர் என 10 பேர் தேர்வாகினர். இக்கல்வி மாவட்டங்களில் விருதுக்கு விண்ணப்பித்த முதுநிலை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இந்தாண்டு ஓய்வு பெறும் நிலையில் உள்ள தலைமையாசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை.
ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் மாநில அளவில் 2 விருதுகள் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். இதன்படி விண்ணப்பித்தவர்களையும் புறக்கணித்துள்ளனர். வருங்காலங்களில் இது போன்ற பாரபட்ச நிலையை தவிர்க்க வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.