Breaking

Friday, September 17, 2021

பள்ளி வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச படம்: மாணவரின் உறவினர் கைது

நீலாங்கரை பகுதியிலுள்ள பள்ளியின் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் மாணவர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பிய மாணவரின் உறவினர் கைது செய்யப்பட்டார்.


நீலாங்கரை பகுதியிலுள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், தனது பள்ளியின் 7ம் வகுப்பு மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு மாணவனது வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து ஆபாச படங்கள் அனுப்பியுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், அப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர், அவரது தாத்தா வீட்டில் தங்கியபோது, தாத்தாவின் செல்போன் மூலம் அப்பள்ளியில் நடைபெறும் ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்துள்ளார்.


அப்பொழுது மாணவனின் சித்தப்பா பசுபதி என்பவர் மேற்படி செல்போனிலிருந்து, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் பள்ளியின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பியுள்ளது தெரியவந்தது.


அதன்பேரில், மாணவர்களின் வாட்ஸ்ஆப் குழுவில் ஆபாச படங்களை அனுப்பிய மதுராந்தகத்தில் பொளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பசுபதி (25) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பசுபதி விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog