Breaking

Tuesday, September 14, 2021

தமிழகத்தில் இன்று புதிதாக 1,591 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,591 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழக கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,591 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 26,37,010 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் 1,537 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,85,244 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது.


இன்றைய நிலவரப்படி 16,549 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:


சென்னை - 212


கோவை - 201


ஈரோடு - 128


தஞ்சாவூர் - 119


செங்கல்பட்டு - 116

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog