டிஏ கிடைக்குமா?
அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களுடன் அரசு பேச்சு சட்டசபையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து, அதன் சங்கங்களின் நிர்வாகிகளுடன், அரசு திடீரென நேற்று பேச்சு நடத்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 18 மாதங்களாக கிடைக்காமல் இருக்கும் 'டி.ஏ.' வழங்குவது குறித்த அறிவிப்பு பட்ஜெட் கூட் டத்தொடரிலேயே வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போராட்ட அறிவிப்பு
பேச்சுவார்த்தைகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வி கூறுகையில், “இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் 20 அம்ச கோரிக்கை குறித்து விரிவாக கூறப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவ னத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள் வரும் 30ம் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இல் லாவிட்டால், ஏற்கனவே, கடந்த 21ம் தேதி ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழு முடிவின்படி வரும் 31ம் தேதி 'கறுப்பு பட்டை’ அணிந்து பணிபுரிவது, செப்டம்பர் 9ல் ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் செல் லையா கூறுகையில், “எங்கள் கோரிக்கைகளை முதல்வர் கவனத் துக்கு கொண்டு செல்வதாக கூறினார். அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை சமரசம் இன்றி நிறைவேற்ற வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்துக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.