தமிழகத்தில் 2021-2022 ம் கல்வியாண்டை கட்டணமில்லா கல்வியான்டாக அறிவிக்க கோரி மறுமலர்ச்சி ஜனதா கட்சியினர் முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மனு அனுப்பும் போராட்டம் :
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வேலைகளை இழந்து மாத ஊதியம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்துவது பெரும் சவாலாக உள்ளது. அன்றாட உணவுக்கும், அத்தியாசவசிய தேவைகளுக்கும் பணம் இல்லாத நிலையில் கல்வி கட்டணத்தை எப்படி செலுத்த முடியும் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அரசு தனியார் பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்தும் படி மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இது குறித்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. அதில் தனியார் பள்ளிகள் நடப்பு ஆண்டில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 75% கட்டணமாக வசூலிக்கலாம் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அதனால் 2021-2022 ம் கல்வியாண்டை கட்டணமில்லா கல்வி ஆண்டாக அறிவிக்க கோரி மறுமலர்ச்சி ஜனதா கட்சியினர் முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளி கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுளள்னர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.