மருத்துவ நுழைவுத்தேர்வான NEET PG தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை (NBE) அறிவித்துள்ளது.
NEET PG தேர்வு
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள் அனைத்தையும் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போனது. இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள், பொறியியல் படிப்புகளுக்கான JEE நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NBE), NEET PG தேர்வுகளை செப்டம்பர் 11 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்து, அதற்கான விண்ணப்பத்தை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டது. இந்நிலையில் NEET PG தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்த அறிவிப்பை தற்போது NBE வெளியிட்டுள்ளது.
அதாவது OBC பிரிவினரை சார்ந்த 27% பேர் மற்றும் EWS பிரிவை சேர்ந்த 10% பேர் அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் உரிமை கோர விரும்பினால், ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இட ஒதுக்கீட்டின் கீழ் திருத்தங்களை செய்ய https://nbe.edu.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.